கஞ்சாவை மீன் லொறியில் கடத்திய இருவர் கைது

கொழும்பு மோதர ராஜமால் வத்தை மகப்பேறு வைத்தியசாலைக்கு அருகில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் மீன் வியாபாரி எனவும் மற்றையவர் லொறி சாரதி எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

32 இலட்சம் ரூபா பெறுமதியான 10 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா இதன் போது மீட்கப்பட்டுள்ளது.

இதன் போது கஞ்சா கடத்த பயன்படுத்திய குளிரூட்டப்பட்ட லொறி, கையடக்கத் தொலைபேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மற்றும் மன்னார் பகுதிகளிலிருந்து மீன்களை ஏற்றிச் செல்வதாகக் கூறி இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்