கஞ்சாவுடன் இளைஞர் கைது

-யாழ் நிருபர்-

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் – வேரம் பகுதியில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை 3 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூளாய் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரிடம் வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது அவரிடம் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்