கஞ்சாவுடன் இளைஞன் கைது

பருத்தித்துறை கொற்றாவத்தை பகுதியில் 28 கிராம் 100 மில்லிகிராம் கஞ்சாவுடன் 27 வயதுடைய சந்தேகநபர் காங்கேசன்துறை மாவட்ட பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்