கஜமுத்துக்களுடன் இருவர் கைது

-மூதூர் நிருபர்-

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் பகுதியில் இரண்டு கஜமுத்துக்களுடன் இரண்டு சந்தேக நபர்களை நேற்று சனிக்கிழமை ஈச்சிலம்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குருநாகல் பகுதியைச் சேர்ந்த 60 மற்றும் 47 வயதுடையே இரண்டு சந்தேக நபர்களே இரண்டு கஜமுத்துக்களுடன் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு கஜமுத்துக்களையும் இவர்கள் விற்பனை செய்வதற்கு முயன்ற போது கடற்படை மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவ் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் ஈச்சிலம்பற்று பொலிஸில் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்