கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி

ஆசியாவில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வர்த்தகத்தில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் சரிந்தன.

பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை சுமார் 8.5% சரிந்து ஒரு பீப்பாய் $92.50 (£68.85) ஆகக் காணப்பட்டது.

அமெரிக்காவிலும் கச்சா எண்ணெய் விலை சுமார் 9% சரிந்து ஒரு பீப்பாய் $88.60 ஆகக் குறைந்தது.

இருப்பினும், மோதல் தொடங்கிய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த விலைகள் இன்னும் சுமார் 30% அதிகமாகவே உள்ளன.