
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பில் இந்திய பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் பெப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய இரு தினங்கள் கொண்டாடப்பட உள்ளது.
இந்தியாவில் இருந்து கலந்து கொள்பவர்களுக்கு, ஜனவரி 15 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை, ராமேஸ்வரம் வேர்கோடு பங்குத்தந்தை அலுவலகத்தில், விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளது.
திருவிழாவில் பங்கேற்பவர்கள், அதிக பணம் நகை கொண்டு வர வேண்டாம் எனவும், அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வர வேண்டாம் எனவும், 5 வயது தொடக்கம் 70 வயது வரையான பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்ளுமாறும், பங்குத்தந்தை தோமஸ் பரிபாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.
