கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
அம்பாறையில் வீட்டில் மறைத்து வைத்து கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர், இரு வேறு சந்தர்ப்பங்களின் போது நேற்று திங்கட் கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக சம்மாந்துறை ஊழல் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது மல்வத்தை பகுதியை சேர்ந்த 45 மற்றும் 69 வயதுடைய சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 23000 மில்லி லீட்டர்கள் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்