கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது

-பதுளை நிருபர்-

லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லுணுகலை மெதபதன பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனத்தாபுற பகுதியை சேர்ந்த 52 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடம் இருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று மற்றும் 20000 மில்லி லீற்றர் கசிப்பு கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த சந்தேக நபர் மிக நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக லுணுகலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பதுளை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தையின் ஆலோசனையின் பேரில் லுணுகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்திரசேகரவின் வழிகாட்டலில் லுணுகலை பொலிஸார் குறித்த சுற்றிவளைப்பினை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.