கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது

-பதுளை நிருபர்-

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எல்டப் மேற்பிரிவை சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது கசிப்பு உற்பத்திக்கு ஆயத்தமான நிலையில் வைக்கப்பட்டிருந்த 135000 மில்லி லிட்டர் கோடாவை கைப்பற்றியதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இ.எம். பியரட்ணவின் ஆலோசனையின் பேரில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாகவும் பசறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.