
கசகஸ்தான் நாட்டினருக்கு 30 நாட்கள் இலவச விசா
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில், கசகஸ்தான் நாட்டுப் பிரஜைகள் இந்தியா வருவதற்கு 30 நாட்கள் இலவச விசா வழங்கப்படும் என கசகஸ்தானுக்கான இந்திய தூதுவர் சைலாஸ் தங்கல் அறிவித்துள்ளார்.
சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட குறுகிய காலத் தேவைகளுக்காக இந்தியா வருவோரை ஊக்குவிக்க இந்திய வெளியுறவு அமைச்சு குறித்த திட்டத்தை அறிவித்துள்ளது.
இதன்படி தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய தூதரகத்தில் நேரிலோ அல்லது நிகழ்நிலை (Online) மூலமாகவோ விண்ணப்பித்து இந்த விசாவைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தியாவின் இந்த அறிவிப்பால் கசகஸ்தான் நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
