
கங்கைக்குள் தவறி விழுந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாயம்
கொழும்பு பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் களனி கங்கையில் தவறி விழுந்து காணாமல்போயுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் எச். ஜயலத் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
கொழும்பு விக்டோரியா பாலத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போதே இவர் தவறி களனி கங்கையில் விழுந்து இவ்வாறு காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது கையடக்கத்தொலைபேசி மற்றும் நாராஹென்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவது தொடர்பான ஆவணங்கள் என்பன பாலத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காணாமல்போனவரை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
