கங்குவேலி பகுதியிலுள்ள வயல் நிலங்களுக்கு பணிப்பாளர் நாயகம் கள ஆய்வு

மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் -கங்குவேலி பகுதியிலுள்ள வயல் நிலங்களை இலங்கை விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் வைத்தியர் விக்கிரம ஆராய்ச்சி தலைமையிலான குழுவினர் இன்று  வியாழக்கிழமை நேரில் சென்று கள ஆய்வு செய்தனர்.

அத்தோடு மூதூர் -கங்குவேலி விவசாயிகள் விவசாய பணிப்பாளர் நாயகத்திடம் தமது பிரச்சினைகள் சார்ந்தும் கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன்போது அழிவடைந்த வேளாண்மைகள் பார்வையிடப்பட்டதோடு அழிவடைந்த வேளாண்மைகளின் மீள் விதைப்பும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை விவசாயத் திணைக்கள விரிவாக்கல் மற்றும் பயிற்சி பணிப்பாளர் p.சசிரகுமார, கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.றினோஸ், திருகோணமலை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர், I.L.பௌசுல் அமீர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.