ஓரினச்சேர்க்கை ஆசையில் சென்ற இ.மி.ச ஊழியருக்கு நேர்ந்த பரிதாப நிலை

இலங்கை மின்சார சபையில் மீற்றர் வாசிப்பாளராக பணிபுரியும் நபர் ஒருவரிடமிருந்து 100,000. ரூபா கொள்ளையடித்த குற்றத்தில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபரை இளைஞர் குழுவொன்று வில்லோராவத்தையில் உள்ள வீடொன்றுக்கு இழுத்து சென்றுள்ளதாகவும், அதன் பின்னர் அவரின் ஆடைகளை அவிழ்த்து, அடித்து, கொள்ளையடித்துள்ளதாகவும் மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 17 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

ஒரு சந்தேக நபர் ஓரினச்சேர்க்கை ஒன்லைன் டேட்டிங் செயலியான ‘கிரைண்டர்’ மூலம் இலங்கை மின்சார சபை ஊழியரை சட்டிங் (chatting) மூலம் கவர்ந்துள்ளார்.

பின்னர் மின்சார சபை ஊழியர்  சந்தேகநபர் அனுப்பிய விலாசத்தை பயன்படுத்தி வில்லோரவத்தை வீட்டிற்கு வந்துள்ளார், அந்த விலாசத்தில் இருந்த இளைஞர் அவர் வந்தவுடன் தனது ஆடைகளை களைந்து  மின்சார சபை ஊழியரின் ஆடைகளையும் களைந்துள்ளார்.

அதன்போது எதிர்பாராத வகையில் அந்த வீட்டுக்குள் சில இளைஞர்கள் புகுந்து குறித்த ஊழியரை தாக்கி உள்ளனர்.

வீட்டில் இருந்த இளைஞனின் உடைகளை கழற்றி அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஊழியரை குற்றம் சாட்டி, பொலிஸாருக்கு அறிவிப்போம் என அச்சுறுத்தியுள்ளனர்.

அச்சுறுத்திய பின்னர், சந்தேகநபர்கள் அவரது வங்கி அட்டை மற்றும் அட்டையின் ரகசிய குறியீட்டு இலக்கம் என்பவற்றை பெற்று அதில் இருந்து  70,000 ரூபாய் மற்றும் மற்றொரு கடனட்டையை பயன்படுத்தி 29,000 ரூபாவை  ATM இல் இருந்து எடுத்துள்ளனர்.

எல்லாவற்றையும் இழந்த  ஊழியர் வெளியில் வந்து அருகில் இருந்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், வில்லோரவத்தை, ராவத்தவத்தை மற்றும் லக்ஷபதிய பிரதேசங்களில் இருந்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இதற்கு முன்னரும் இதே போன்று இராணுவ மேஜர் ஒருவரையும் பாடசாலை ஆசிரியர் ஒருவரையும்  Dating App  மூலம் வரவழைத்து கொள்ளையடித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.