ஓய்வூதிய வயதெல்லை குறைப்பு

அரசதுறையில் ஓய்வு பெறும் காலத்தை 60 ஆண்டுகளாக குறைக்க முன்மொழியப்பட்டது.

2022ஆம் ஆண்டின் எதிர்வரும் காலத்துக்கான இடைக்கால பாதீட்டு திட்டத்தை இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பித்துக்கொண்டிருக்கும் ரணில் விக்ரமசிங்க இதை தெரிவித்துள்ளார்.

அதன்படி, 60 வயதை எட்டிய அனைத்து அரச ஊழியர்களும் டிசம்பர் 31-ம் திகதியுடன் ஓய்வு பெறுவார்கள்.