ஓய்வூதியத்தை இரத்து செய்யும் யோசனையை சட்டபூர்வமாக எதிர்க்க தயாராகும் முன்னாள் எம்.பிகள்
தங்கள் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் நோக்கில் கொண்டு வரப்படும் யோசனையை முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டபூர்வமாக எதிர்க்கத் திட்டமிட்டுள்ளனர்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்வதை நோக்கமாகக் கொண்ட வரைவு யோசனை, தற்போது, சட்ட மாஅதிபரின் பரிசீலனையில் உள்ளது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 500 பேரும், கணவர்மாரை இழந்த 150 பெண்களும் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சராசரியாக, ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இறந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் மனைவியருக்கு ஓய்வூதியத்துக்காக மாத்திரம், அரசாங்கம் மாதத்துக்கு சுமார் 27 மில்லியன் ரூபாயை செலவிடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
