ஓய்வு பெற்று செல்லும் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கௌரவமளிக்கும் நிகழ்வு!
-அம்பாறை நிருபர்-
ஓய்வு பெற்று செல்லும் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்னாயக்கவின் 37 வருட பொலிஸ் சேவைக்கு கௌரவமளிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.
அம்பாறை தலைமையக பொலிஸ் மைதானத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் பொலிஸ் அதிகாரிகள் நண்பர்கள் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய ஓய்வு பெறுகின்ற அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தனது சேவைக்காலத்தில் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் பொலிஸாரின் மரியாதை அணுவகுப்பு இடம்பெற்றதுடன் அந்த மரியாதை அணிவகுப்பினை ஏற்றுக்கொண்டு விடைபெற்றுச்சென்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
Beta feature
Beta feature