ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கத் தீர்மானம்

ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க சீனா தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் மக்கள் தொகை குறைந்து வருவதையும், ஊழியர்களின் வயது அதிகரித்து வருவதையடுத்து குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி சீனாவின் புதிய ஓய்வூதியக் கொள்கை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய ஆண்களின் ஓய்வு பெறும் வயது 60 வயதிலிருந்து 63 ஆகவும், அலுவலகப் பணிகளில் ஈடுபடும் பெண்களின் ஓய்வு பெறும் வயது 55இல் இருந்து 58 ஆகவும் உயர்த்தப்படவுள்ளது.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்