ஓமந்தை விபத்து – இருவர் உயிரிழப்பு
வவுனியா – யாழ்ப்பாணம் பிரதான வீதியின் ஓமந்தை பகுதியில் இன்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
வவுனியா – யாழ்ப்பாணம் பிரதான வீதியின் ஓமந்தை பகுதியில் கெப் ரக வாகனம் மற்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிகின்றன .