
ஓந்தாச்சிமட விபத்தில் அரச ஊழியர் பலி
மட்டக்களப்பு – ஓந்தாச்சிமடத்தில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் அரச ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் எருவில் சமூர்த்தி வங்கியில் காசாளராக கடைமையாற்றும் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நாகராசா விஜேந்திரன் (வயது – 58) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் மீது ஜீப் வண்டி மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, தெரியவருகின்றது.
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி, போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

