
ஓடும் பேருந்தில் பெண்ணுடன் உடலுறவுகொண்ட நடத்துனர்
இந்தியாவில் ஓடும் பேருந்தில் இளம் பெண்ணுடன் உடல் உறவு கொண்ட நடத்துனர் தொர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிக்கொண்டு வருகின்றது.
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இருந்து லக்னோ சென்றுக்கொண்டிருந்த பேருந்தில், இளம் பெண்ணுடன் பேருந்தின் நடத்துனர் உடலுறவு கொண்டுள்ளார். இதை நீண்ட நேரம் கவனித்துக்கொண்டிருந்த பயணி ஒருவர், இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
குறித்த வீடியோவில் பயணி ஒருவர் நடத்துனரிடம் சீட் கேட்பது போல வீடியோ எடுக்கிறார். அவர் வீடியோ எடுப்பதை அறிந்துக்கொண்ட நடத்துனர் அந்த பயணியிடம் இருந்து தொலைபேசியை அபகரிக்க முயற்சிக்கிறார். இதை கண்ட மற்ற பயணிகளும் இந்த சம்பவத்தை வீடியோ எடுக்க தொடங்கியுள்ளனர்.
குறித்த பயணி தொடர்ந்து வீடியோ எடுத்த நிலையில் அவர்கள் இருவரும் போர்வைக்குள் மறைந்து கொண்டு ஆடைகளை எடுத்து மாட்டிக் கொள்ளும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நடத்துனர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளர். மேலும் அவருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்