
ஓடுபாதையில் விமானம் தீப்பிடித்து 5 பேர் உயிரிழப்பு : விசாரணைகள் ஆரம்பம்
ஜப்பான் ஏயார்லைன்ஸ் விமானம் மற்றும் கடலோர காவல்படை விமானமும் மோதிய சம்பவத்தில் விமான நிலைய கட்டுப்பாட்டு கோபுரத்தில் (ATC Tower) இருந்து விமானிகளுக்கு வழங்கப்பட்ட குரல் பதிவுகளை மீட்டு வழங்கப்பட் சமிக்ஞைகள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பிரான்ஸ் மற்றும் ஜப்பான் விமான பொறியல் வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளதுடன் இவர்களுக்கு உதவியாக எயார்பஸ் நிறுவன அதிகாரிகளையும் அனுப்பி வைப்பதாக எயார்பஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் ஏயார்லைன்ஸ் பயணிகள் விமானம் தரையிறங்கி ஓடுபாதையை தொட்ட வேளையில் கடலோர காவல்படையால் இயக்கப்படும் மற்றொரு விமானமான DHC 8-300 பதிவிலகம் 8-300 விமானத்துடன் மோதியது.
இதனால் ஜப்பான் ஏயார்லைன்ஸ் பயணிகள் விமானம் தீ பிடித்ததில் 379 பேரும், இரண்டு வயதுக்குட்பட்ட எட்டு குழந்தைகள் உட்பட, எரியும் பயணிகள் விமானத்தில் இருந்து பாதுகாப்பாக அவசரவழியூடாக வெளியேற்றப்பட்டனர்.
கடலோர காவல்படை விமானமும் தீ பிடித்ததில் அதில் இருந்த ஐந்து பேர் சம்பவத்தில் உயிரிழந்தனர்.
விமானத்தின் கப்டன் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
ஜப்பானில் முதலாம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு குறித்த கடலோர காவல்படை விமானம் நிகாட்டா விமான நிலையத்திற்கு செல்லவிருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
“இது மனித தவறு சம்பந்தப்பட்ட ஒரு வலுவான சாத்தியம் உள்ளது, என முன்னாள் ஜப்பான் விமானி மற்றும் விமான ஆய்வாளர் Hiroyuki கோபயாஷி கூறியுள்ளார்.
பொதுவாக ஒரு விமானம் மட்டுமே ஓடுபாதையில் நுழைய அனுமதிக்கப்படுகிறது, ஆனால் தரையிறங்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், ஜப்பான் கடலோர காவல்படை விமானம் ஓடுபாதையில் இருந்துள்ளது.


