ஒஸ்ட்ரியாவில் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு : 10 பேர் உயிரிழப்பு!
ஒஸ்ட்ரியாவில் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு : 10 பேர் உயிரிழப்பு!
ஒஸ்ட்ரியாவில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபரும் தமது உயிரை மாய்த்துக்கொண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயம் அடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிதாரி குறித்த தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.