
ஒவ்வொரு வருடமும் தொடரும் குளவித்தாக்குதல்!
-மஸ்கெலியா நிருபர்-
மஸ்கெலியா-நல்லதண்ணி சிவனொளிபாதமலைக்கு செல்லும் வீதியில் உள்ள குளவி கூடுகளை, அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் உள்ள, மரங்கள் மற்றும் பாறை குகைகளில் காணப்படும் குளவி கூடுகளால், சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
எனவே, சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், குளவி கூடுகளை உடனடியாக அகற்றுமாறு, வனவிலங்கு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த குளவி கூடுகளை பருந்துகள் தொடர்ந்து தாக்குகின்றன, அதுமட்டுமன்றி பலத்த காற்றும் வீசுகின்றது, அதனால் குளவிக்கூடுகள் கலைந்து அப்பகுதிக்கு வரும் மக்களை கொட்டுகின்றது.
ஒவ்வொரு வருடமும், சிவனொளிபாதமலை பருவகாலத்தில் குளவித் தாக்குதல்களால், பக்தர்கள் கடுமையான சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
ஆகவே சம்மந்தப்பட்டவர்கள் இவ்விடயம் தொடர்பில் கவனம் எடுக்குமாறு, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
