ஒலுவில் ஷஹ்வா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு கணினிகள் வழங்கி வைப்பு
ஒலுவில் ஷஹ்வா அரபுக் கல்லூரியின் நீண்ட நாள் தேவையாக இருந்த நவீன தொழில்நுட்ப பாடத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான கணிணிகளின் தேவை குறித்து கல்லூரி நிர்வாகம் விடுத்த வேண்டுகோளின் பேரில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனால், கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் ஊடாக பெறுமதியான கணிணிகள் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினரும் கட்சியின் பிரதி செயலாளருமான எம்.ஏ. அன்சில், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.சிறாஜ், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் எஸ். முஹம்மட் அலி ஜின்னா, கல்லூரியின் அதிபர் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





