
ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்ட சிசுவின் 17 வயது பெற்றோருக்கு விளக்கமறியல்!
ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட குழந்தையின் தாய் – தந்தை இருவரையும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று புதன்கிழமை அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், குழந்தையை பிரசவித்து அதனை அநாதரவாக கைவிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட, நிந்தவூரை சேர்ந்த தாய் மற்றும் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை ஆகியோரை, விளக்கமறியலில் வைக்கமாறு நீதவான் உத்தரவிடப்பட்டார்.
17 வயதையுடைய குறித்த இருவரும், திருமணமாகாமல் இளம் வயதில் முறையற்ற விதத்தில் குழந்தையை கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசவித்துள்ளனர்.
இந்தப் பின்னணியில் குழந்தையின் தந்தை மற்றும் தாய் உள்ளிட்டோரை கைது செய்த பொலிஸார் அவர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, இருவரையும் ஒக்டோபர் மாதம் 03 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தற்போது குறித்த குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடபட்ட குழந்தையின் தாயும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிசுவின் 17 வயதான தாயும் தந்தையும் கைது!
