ஒலிம்பிக் வீராங்கனையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த காதலன்

உகாண்டா நாட்டை சேர்ந்த ஒலிம்பிக்ஸ் மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை ரெபேக்கா செப்டேகி மீது அவரது காதலன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இறுதியாக உகாண்டா சார்பில் பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு மாரத்தான் பிரிவில் 44 ஆவது இடத்தைப் பிடித்த ரெபேக்கா சமீபத்தில் நாடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில் கென்யா நாட்டில் மேற்கு மாகாணத்தில் அவருக்கு சொந்தமான வீட்டில் ஓய்வில் இருந்த போது வீட்டில் வைத்து ரெபேக்காவுக்கும் அவரது காதலன் டேனியலுக்கும் இடையில் வாக்குவாதம் எழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அவரது காதலன் ரெபேக்கா மீது பெட்ரோல் ஊற்றி தீவை வைத்துள்ளார்.

இதன்காரணமாக கென்யாவில் உள்ள மருத்துவமனையில் 75 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளை டேனியலுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக உகாண்டா மற்றும் கென்ய நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்