ஒரே வருடத்தில் 700 தாதியர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றம்

ஜனவரி 2022 மற்றும் ஜனவரி 2023இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 700 தாதியர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் அங்கீகாரத்துடன் 550 தாதியர்கள் விடுமுறை எடுத்து ஐந்து வருட காலத்திற்கு மேலதிக கல்விக்காக வெளிநாடு சென்றுள்ளனர், எனினும் சுமார் 150 தாதியர்கள் எவ்வித அறிவித்தலுமின்றி வெளிநாடு சென்றுள்ளதாக அமைச்சு தெரிவிக்கிறது.

தற்போது தாதியர் சேவையில் சுமார் 2இ400 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும்இ இந்த வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் சாமிக்க கமகே தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்