ஒரே நாளில் 1,000 மிஸ்ட் கோல்: காதலிக்கு சிறை
பிரித்தானியாவில், முன்னாள் காதலனைத் தொடர்ச்சியாகத் தொல்லை செய்து வந்த பெண்ணுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சோபி கால்வில் என்ற 30 வயதுடைய பெண்ணுக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சோபி கால்வில் டேவிட் பாக்லீரோ என்ற நபருடன் காதல் உறவில் இருந்த நிலையில் அண்மையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாகக் குறித்த பெண் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
காதலனை இழக்க விரும்பாத அவர், டேவிட்டிற்கு 1,000 முறை தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் டேவிட் குறித்த அழைப்பைத் தவிர்த்துள்ளார்.
மேலும் டேவிட்டை கண்காணித்து வந்த அவர், டேவிட்டின் வீட்டிற்குள்ளும் அத்துமீறி நுழைந்துள்ளார்.
சோபியின் இந்த செயற்பாடுகளால் தனக்குப் பாதுகாப்பின்றி உணர்வதாகவும் தனக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் டேவிட் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் சோபிக்கு 1 வருடச் சிறைத் தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
