ஒரே நாளில் பாரிய விலை அதிகரிப்பை பதிவு செய்த தங்கத்தின் விலை!
இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை ஒரே நாளில் 8,000 ரூபாயால் அதிரடியாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் தளம்பல் நிலை மற்றும் உள்நாட்டில் தங்கத்திற்கான கேள்வி தீவிரமாக அதிகரித்துள்ளமையே இந்த வரலாறு காணாத விலை உயர்வுக்குக் காரணம் என வர்த்தக வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 393,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 361,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,188 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
