
ஒரே நாளில் இரட்டை சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, ஒருநாள் சர்வதேச போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக ஓட்டங்களைப் பெற்ற இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 93 ஓட்டங்களைப் பெற்றிருந்த கோலி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையைச் சமன் செய்திருந்தார்.
இன்று புதன்கிழமை இரண்டாவது போட்டியில் தான் எதிர்கொண்ட முதலாவது பந்திலேயே ஆறு ஓட்டத்தை விளாசி, சச்சினின் சாதனையை முறியடித்தார்.
அதன்படி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர் என்ற உலகளாவிய பட்டியலில் விராட் கோலி (1,751 ) ஓட்டங்கள் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அத்தோடு, ரிக்கி பொண்டிங் (அவுஸ்திரேலியா) 1,971 ஓட்டங்களுடன் முதல் இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) 1,750 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்திலும், சனத் ஜயசூரிய (இலங்கை) 1,519 ஓட்டங்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
மேலும், இந்த தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 28,000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற உலக சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.
இதன் மூலம் இலங்கையின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் (28,016 ஓட்டங்கள்) சாதனையை முறியடித்து, சர்வதேச அரங்கில் அதிக ஓட்டங்கள் எடுத்த இரண்டாவது வீரராக கோலி முன்னேறியுள்ளார்.
