
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி
சிலாபம் முகத்துவாரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இன்று ஞாயிற்றுக்கிழமை நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பில் இருந்து சிலாபத்திற்கு சுற்றூலா சென்ற 7 வயது (மகள்) 6 வயது (மகன்) மற்றும் 35 வயதுடைய தந்தை ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சிலாபம் முகத்துவாரத்திற்கு படகில் சென்ற இவர்கள் படகில் இருந்து இறங்கி நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இவர்கள் மூவருடைய சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
