
ஒரே ஒரு முறை தான் கெஹெல்பத்தர பத்மேவை நான் சந்தித்தேன் – பியூமி ஹன்சமாலி
தற்போது பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடன் தொடர்புகளை பேணி வந்தமை குறித்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பிரபல மொடல் பியூமி ஹன்சமாலியிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளுக்காக பிரபல மொடல் பியூமி ஹன்சமாலி இன்று புதன்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்தார்.
இதன்போது ‘கெஹெல்பத்தர பத்மே’ உடனான தொடர்பு குறித்து பிரபல மொடல் பியூமி ஹன்சமாலியிடமிருந்து சுமார் 03 மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணை குறித்து பியூமி ஹன்சமாலி தன்னுடைய பேஸ்புக் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 2022 இல் துபாயில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கெஹெல்பத்தர பத்மேவை ஒரு முறை மட்டுமே சந்தித்தேன் அது ஒரு சாதாரணமான சந்திப்பு
நான் முதலில் அந்த நபரை அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அந்த நிகழ்வில் பார்த்தேன். அவர்கள் என்னுடன் ஒரு புகைப்படம் எடுத்தனர். கெஹெல்பத்தர பத்மே தான் அழகாகவும் கவர்ச்சியாகவும் மாற விரும்புவதாக கூறினார். எனவே நான் எனது பியூமி ஸ்கின் தயாரிப்புகளைப் பயன்படுத்தச் சொன்னேன்
பத்மே எனது தயாரிப்புகளைப் பயன்படுத்தியிருக்க வேண்டும் ஏனெனில் அவர் இப்போது மிகவும் கவர்ச்சியாகத் தெரிகிறார் என்று ஹன்சமாலி குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
பத்மேவுடன் எந்த நிதி பரிவர்த்தனைகளிலும் நான் ஈடுபட்டதில்லை அவருடன் எனக்கு ஏதேனும் பணப் பரிவர்த்தனைகள் இருந்ததா என்று சிஐடி கேட்டது – ஒருபோதும் இல்லை! எனக்கு போதைப்பொருள் பணம் சட்டவிரோத பணம் அல்லது வேறு எந்த கருப்புப் பணமும் தேவையில்லை. நான் எனது வணிகமான பியூமி ஸ்கின் பிரைவேட் லிமிடெட்டை உருவாக்கிய ஒரு சுதந்திரமான பெண் என குறிப்பிட்டுள்ளார்.
எனக்கும் பாதாள உலகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நகைச்சுவையாகச் சொன்ன பியூமி அந்த விஷயங்களுக்கு நான் பயப்படுகிறேன் வீணாக துப்பாக்கிச் சூட்டில் இறக்க நான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
