ஒரே உடலில் இரு தலைகள்: இரண்டு சம்பளம் வாங்கும் அதிசயம்!
இந்தியாவில் பஞ்சாப்பில் பிறக்கும்போதே இரண்டு தலைகள் ஒரு உடலுடன் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களின் வாழ்க்கை பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது மட்டுமல்லாமல், உடல்ரீதியாக இவர்கள் பல்வேறு அதிசயங்களைக் கொண்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
சோஹ்னா மற்றும் மோஹ்னா ஆகிய இருவரும் ஒட்டியே பிறந்த இரட்டையர்களாக திகழ்கின்றனர்.
உடல் இரண்டாக உள்ள இவர்களுக்கு கை நான்கு, கால் இரண்டு, தலை இரண்டு, வயிறு ஒன்று உள்ளது. இதில் மற்றொரு விநோதம் என்னவென்றால் இரண்டு கால் இருந்தாலும், ஒரு காலை தொட்டால் சோஹ்னாவுக்கு உணர்வு ஏற்படுகிறது. மற்றொரு காலை தொடும்போது அது மேஹ்னாவுக்கு மட்டுமே தொடு உணர்வைத் தருகிறது. அதைப் போன்று இரண்டு பேரும் ஒரே உடம்புக்குள் இருந்தாலும் ஒருவரின் தலையைத் தொடும் போது மற்றொருவருக்கு உணர்வு வருவதே இல்லை. இரண்டு பேருக்கும் பொதுவாக இருக்கும் வயிறு, நெஞ்சு போன்ற பகுதியை தொட்டால் இருவருக்கும் உணர்ச்சி உருவாகிறது.
ஆனால், இந்த இருவரும் ஒன்றாகவே தூங்குகிறார்கள். ஒன்றாகவே கழிவறைக்குப் போகிறார்கள். இந்த இருவருக்கும் வயிறு ஒன்றுதான் என்றாலும் இருவருமே தனித்தனியாகச் சாப்பிடுகிறார்கள். ஒரு சாப்பிட்டுவிட்டார் என்பதால் மற்றொருவரின் பசி அடங்கிவிடுவதில்லை. அதுவும் ஆச்சரியமாக உள்ளது. இருவருக்கும் ரத்தத்தின் குரூப் ஒன்றாகவே உள்ளது. அறிவியல் ரீதியாகப் பார்த்தால் இரண்டு குழந்தைகளாக தனித்தனியாகப் பிறக்க வேண்டிய இவர்கள் கரு உருவாகும் போது ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக் கொண்டுவிட்டார்கள். அக்கரு அப்படியே வளர்ந்துவிட்டது. பிறந்த பிறகு இதயமும், நுரையீரலும் ஒன்று மட்டுமே இருந்ததால் இவர்களை அறுவை சிகிச்சை மூலம் பிரிக்க முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இவர்கள் பிறந்த போது உயிர்வாழ்வதற்கு 15% வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதைப் பொய்யாக்கி இந்த இரட்டையர்கள் இப்போது வரை இன்பமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த இருவரும் 4 அடி உயரம் உள்ளனர். இவர்களின் அகலம் 3.2 இஞ்ச் இருக்கின்றது. இவர்கள் ஒட்டியே பிறந்ததால் இவர்களது பெற்றோர்கள் சிறு வயதிலேயே கைவிட்டுவிட்டார்கள். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காப்பகம் ஒன்றில்தான் இந்த இருவரும் வளர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது 22 வயதை நிறைவு செய்துள்ள இந்த இரட்டையர்கள் எப்படிப் பசி வந்தால் தனித்தனியாகச் சாப்பிடுகிறார்களோ, அதே போல இரண்டு பேருக்கும் தனித்தனியாகச் சம்பளம் அளிக்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் மாதம் தலை 10,000 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது என்பது வியக்கத்தக்க விடயமாகும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
