ஒரு மணி நேர காதலுக்கு ரூ.21ஆயிரம் : அன்புக்கு ஏங்கி செலவு செய்யும் பெண்!
ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் அன்பைப் பெற விரும்புகிறார்கள். அது நட்பாகவோ, அல்லது காதலாகவோ இருக்கலாம்.
அப்படி சிறுவயதிலிருந்தே மாற்றுத்திறனாளியான ஆஸ்திரேலிய பெண் ஒருவர் காதலுக்கு ஏங்கி ஒரு முடிவை எடுத்துள்ளார். அவர் தன் வாழ்நாளில் எந்த ஆணுடனும் காதல் வயப்படவில்லை. ஆனால் இப்போது 40 வயதைத் தாண்டிய பிறகு, அவர், முக்கிய முடிவை எடுத்துள்ளார்.
டெய்லி ஸ்டார் நியூஸ் எனும் வலைதளத்தின்படி, 43 வயதான இந்த பெண் தற்போது பேசும் பொருளாகியிருக்கிறார். அவர் தனது 3 வயது முதல் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவரது முதுகுத்தண்டில் பிரச்சனை ஏற்பட்டு நடக்க முடியவில்லை. கொரோனா முடக்கத்தின் போது, மருத்துவ தொடர்பைத் தவிர, ஒரு ஆணின் காதல் தொடுதலையும் உணர வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.
பின்னர் இந்தப் பெண் ஆன்லைனில் பணத்திற்காக காதல் செய்யும் ஒரு வெப்சைட்டை கண்டுபிடித்தார். பிபிசியிடம் பேசிய பெண், ஆன்லைனில் தான் கண்டறிந்த செஸ்ஸி எனும் ஆணின் வீட்டுக்கு, தனது உதவியாளருடன் சென்றதாகவும், அவரது உதவியாளர் அவரை அங்கு விட்டு விட்டு வெளியேறியபோது, இவர்கள் இருவரும் நேரம் செலவழித்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளைப் பற்றி செஸ்ஸிக்கு எதுவும் தெரியாது என்றும், அதே சமயம் இருவரும் மிகவும் நல்ல நண்பர்களாகிவிட்டதாகவும் மெலனி கூறினார். பிபிசி உடனான கலந்துரையாடலில், மெலனிக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க விரும்புவதாக செஸ்ஸி கூறினார். அவர் 1 மணிநேரத்திற்கு சுமார் 21 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார். அதேசமயம் 2 நாட்களுக்கு அவருடைய கட்டணம் லட்சங்களில் உள்ளது. மெலனி மிகவும் இனிமையானவர், யாரேனும் அவளைக் காதலிப்பார்கள், ஆனால் அவருடன் நேரம் செலவழிக்கும் போது, அது ஒரு தொழில்முறை உறவு என்பதை அவர் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதாக செஸ்ஸி கூறினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்