ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வருமானம் பெறும் கோடீஸ்வர அழகி பொலிஸாரிடம் சிக்கியது எவ்வாறு?
பாலியல் தொழில் மூலம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் உழைத்த கொழும்பு கோடீஸ்வர அழகி அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு தெஹிவளை பகுதியில் விபச்சார விடுதியொன்றில் கைது செய்யப்பட்ட 24 வயதான இளம் பெண்ணிடம் ரூ.10 கோடிக்கும் அதிகமான சொத்து இருந்த தகவல் அண்மையில் வெளியாகியிருந்தது.
இந்த விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தப்பெண் விபச்சாரம் மூலம் நாளாந்தம் ரூ.100,000 இற்கும் அதிகமான பணத்தை ஈட்டி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொழும்பிலுள்ள செல்வந்தர்கள் வெளிநாட்டினரை இலக்கு வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டதே அவர் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது.
கொள்ளுப்பிட்டி 17வது பாதையில் அமைந்துள்ள இரண்டு மாடி கட்டிடத்தில் இந்த விபச்சார விடுதி இயங்கி வந்துள்ளது. கடந்த 2 வருடங்களாக எந்த தடங்கலுமின்றி விபச்சார விடுதி ரகசியமாக இயங்கி வந்தது.
இலங்கையில் இதுவரை சிக்கிய உயர்தர விபச்சார வலையமைப்புக்களில் இந்த வலையமைப்பும் ஒன்று என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பிலுள்ள பெரும் செல்வந்தர்கள் வெளிநாட்டிலிருந்து உல்லாசத்துக்காக வரும் பணக்காரர்களை இலக்கு வைத்து இந்த விபச்சார விடுதி செயற்பட்டது.
அதற்கேற்ப மிக அழகான இளம் யுவதிகளை மாத்திரமே இங்கு சேவை வழங்குனர்களாக தெரிவு செய்துள்ளனர். தாய்லாந்தை சேர்ந்த இரண்டு யுவதிகளும் அங்கு தங்கியிருந்துள்ளனர்.
மேலும், இந்த விபச்சார விடுதியை நடத்துவதற்கு 475,000 ரூபா மாத வாடகை செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தில் விபச்சார விடுதி இயங்கும் தகவல் பொலிசாருக்கு கிடைத்ததும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவின்படி அண்மையில் விடுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாணிக்கக்கல் வர்த்தகரை போல பாவனை செய்து சொகுசு வாகனத்தில் அந்த விபச்சார விடுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு தாய்லாந்து யுவதியொருவருடன் ஒரு மணித்தியாலம் உல்லாசமாக இருக்க ரூ.10,000 அறவிடுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, பணத்தை செலுத்தி மேல் மாடியிலுள்ள அறையொன்றுக்கு தாய்லாந்து யுவதியை அழைத்துச் சென்றுள்ளார். அறைக்குள் நுழைந்ததும், பொலிசாருக்கு இரகசிய தகவல் வழங்கினார்.
இதன்படி அந்த பகுதியில் மறைந்திருந்த பொலிசார் திடீரென விடுதிக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை கைது செய்தனர். தாய்லாந்து யுவதிகள் இருவர், இலங்கையை சேர்ந்த 24 வயதான யுவதி, முகாமையாளர், விடுதியை நடத்தியவர் கைது செய்யப்பட்டனர்.
விடுதியை நடத்தியவர் முன்னாள் இராணுவ வீரர் என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிசார் விடுதிக்குள் நுழைந்த போது விடுதியை நடத்தியவரும், 24 வயதான இலங்கை பெண்ணும் மற்றொரு அறைக்குள் ஒன்றாக இருந்துள்ளனர். அந்த பெண்ணுக்கு 7 வயதில் மகளும் இருக்கிறார். அவர் விபச்சார விடுதியின் பிறிதொரு அறையில் தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.
24 வயதான அந்தப் பெண் விபச்சாரத்தின் மூலம் கிட்டத்தட்ட ரூ.10 கோடி பெறுமதியான சொத்துக்களை சேர்த்துள்ளது தெரிய வந்துள்ளது.
அவரிடம் 3 அதி சொகுசு கார்கள் இருந்துள்ளன. அவற்றில் ஒன்றை அண்மையில் இலங்கையின் முன்னணி கோடீஸ்வரர் ஒருவர் பரிசளித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிலியந்தலை பிரதேசத்தில் மூன்று மாடி வீடொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அந்த இளம்பெண் விபச்சார விடுதி அமைந்துள்ள கட்டிடத்தை திருத்துவதற்காக 35 இலட்சம் ரூபாவை விபச்சார விடுதி உரிமையாளரான முன்னாள் இராணுவ வீரருக்கு கடனாக வழங்கியுள்ளதாகவும் கைது செய்யப்படும் போது குறித்த யுவதியிடம் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் மேல் இருந்ததாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபச்சார விடுதியை நடத்தி வந்த முன்னாள் இராணுவ வீரருக்கு கைது செய்யப்படும் போது மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்