
ஒரு சில நாட்களுக்குள் நாட்டில் இரத்தக்களரி மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படலாம்
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை நாளை 09 ஆம் திகதி மற்றும் அதனைச் அண்டிய நாட்களில் மேலும் தீவிரமடையும் என ஜோதிடர் கே.ஏ.யு. சரச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யூடியூப் சனல் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், ஜுலை மாதம் 9ஆம் திகதி உட்பட ஒரு சில நாட்களுக்குள் நாட்டில் இரத்தக்களரி மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படலாம்.
ஜூலை 12ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியை இழக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
