ஒரு கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு 14 பிரதேசத்தில் ஒரு கிலோ கிராம் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்