ஒரு ஓவரில் 39 ஓட்டங்களைப் பெற்று சாதனை!

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ஓவரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற அணி என்ற சாதனையை சமோவா அணி தம்வசப்படுத்தியுள்ளது.
இந்த சாதனையைப் படைப்பதற்காக சமோவா அணியின் துடுப்பாட்ட வீரர் டேரியஸ் விஸ்ஸர் பெரும் பங்களிப்பு செய்துள்ளார்.
இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான கிழக்கு ஆசிய – பசிபிக் பிராந்திய அணிகளுக்கான தகுதிகாண் போட்டியில் சமோவா மற்றும் வனுவாடு ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
குறித்த போட்டியில் சதம் பெற்ற சமோவா அணியின் டேரியஸ் விஸ்ஸர், வனுவாடு அணியின் வேகப்பந்து வீச்சாளர் நளின் நிபிகோ வீசிய ஓவர் ஒன்றில் 36 ஓட்டங்களைப் பெற்றார்.
அத்துடன், இந்த ஓவரில் மொத்தமாக மூன்று செல்லுபடியற்ற பந்து வீச்சுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதன்படி, ஒரே ஓவரில் சமோவா அணி 39 ஓட்டங்களை பெற்று ஒரு ஓவரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற அணி என்ற சாதனையையும் தம்வசப்படுத்தியது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்