
ஒரு அமர்வில் கலந்துகொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 62000 ரூபா செலவு
தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதில் உறுப்பினர்கள் சிரமப்படுகின்றனர் என சபாநாயகர் மகிந்தயாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்
ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒரு அமர்வில் கலந்துகொள்வதற்கு யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 62000 ரூபாவும் மாத்தறை நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு நாளைக்கு 42000 ரூபாவும் செலவாகின்றது
தற்போதைய சூழ்நிலை காரணமாக நாடாளுமன்ற ஜனநாயகத்தை பேணுவது கடினமாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
