ஒருவர் வெட்டிக் கொலை

தெகிவலை பிரதேசத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் நேற்று சனிக்கிழமை இரவு ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான நபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓபன் பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் கொலையுடன் தொடர்புடைய நபர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.