ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் கில் முதலிடம்
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.
இதன்படி குறித்த பட்டியலில் இந்திய அணியின் சுப்மன் கில் முதலிடத்தைத் தன்வசப்படுத்தியுள்ளார்.
அத்துடன் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்திலும், பாபர் அசாம் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
முன்னதாக பாபர் அசாம் இரண்டாவது இடத்திலிருந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான தொடரில் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் புள்ளிப்பட்டியலில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
மேலும் குறித்த புள்ளிப்பட்டியலில் விராட் கோலி 4ஆவது இடத்தில் உள்ளதுடன், நியூசிலாந்து அணியின் டேரல் மிட்செல் 5 ஆவது இடத்திலும், இலங்கை அணியின் சரித் அசலங்க 6ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.