ஒன்லைன் மோசடியாளர்கள் இருவர் கைது

கம்பஹாவில் சமூக ஊடக தளங்களை பயன்படுத்தி பண மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் பிரிவினர் இருவரைக் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் பல நபர்களிடமிருந்து ஆன்லைனில் பணம் பெற்றதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்பே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து தேசிய அடையாள அட்டைகள், ஓட்டுநர் உரிமம் மற்றும் மொபைல் போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.