
ஒன்றோடு ஒன்று மோதிய பேருந்து: 22 பேர் காயம்
மஹாஓயா – அரலகங்வில வீதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் 22 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹா ஓயாவிலிருந்து அரலகங்வில திசை நோக்கி பயணித்த தனியார் பேருந்து எதிர்திசையில் வந்த மற்றுமொரு தனியார் பேருந்துடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரண்டு பஸ்களிலும் பயணித்த 02 ஆண்கள், 12 பெண்கள், 06 சிறுவர்கள் மற்றும் 02 சிறுமிகள் காயமடைந்து மஹாஓயா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் பேருந்து ஒன்றின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மஹாஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
