
ஒன்பது வயது சிறுமிக்கு விரும்ப தகாத செயலை செய்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை-தொவனிபியவர பகுதியில் சிறுமிக்கு ஆணுறுப்பை காட்டிய குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மஹதிவுல்வெவ -தெவனிபியவர பகுதியில் வசித்து வரும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான பட்டிப்பல ஆராச்சிகே சுனந்த ஜயசூரிய என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 27 ஆம் திகதி ஒன்பது வயது சிறுமி தனியாக வீட்டில் இருந்த போது குறித்த நபர் ஆணுறுப்பை காட்டியதாக தாயாரிடம் கூறியதையடுத்து தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
