“ஒண்ணும் இல்லம்மா” என்று சொல்லும் ஆண்களின் உளவியல்

ஆண்களால் அழுது, புலம்ப முடியாது. அப்படி செய்தால் என்னடா எப்போ பாரு பொண்ணு மாதிரி அழுதுக்கிட்டேயிருக்கன்னு கிண்டல் செய்யும் இந்த உலகம். அதனால் மறைப்பதே ஒரே வழி.

சாதாரணமாக ஒரு ஆண் மற்றவரிடம் தன் கஷ்டத்தை பகிர்ந்து கொள்ள நினைப்பதே அரிது. அதற்கு முக்கியமான காரணம். அது மற்றவரையும் கஷ்டப்படுத்தும் என்பதே. முக்கால்வாசி நேரம் சோகமாக இருக்கும் ஆண்கள் சிரித்து கொண்டு தான் இருப்பார்கள். அவர்கள் மனதில் சோகம் இருக்கிறது என்பதே நமக்கு தெரியாது. ஏதோ ஒரு சூழ்நிலையில் அவர்கள் வெளியில் சொல்லும் பொழுது தான் இவ்வளவு கஷ்டத்தை மனதில் வைத்து கொண்டு எப்படி சிரித்து கொண்டிருந்தார்கள் என்று ஆச்சர்யப்படுவோம்.

ஆண்கள் தன் சோகத்தை கண்டிப்பாக குடும்பத்தில் இருப்பவரிடம் சொல்ல மாட்டார்கள். கண்டுப்பிடித்து கேட்டாலும் ஒன்னுமில்லை என்று சொல்லி விடுவார்கள். அதற்கான காரணம் வீட்டில் உள்ள பெண்களால் அதை தாங்கி கொள்ள முடியுமா என்று தெரியாது. தன்னுடனேயே போட்டு புதைத்து கொண்டு எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள்.

அதற்கான உளவியல் காரணம் சிம்பிள். மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு போகட்டும் என்பது தான்.ஏன் கஷ்டத்தை சொல்லி அவங்களையும் கஷ்டப்படுத்தணும்னு தான்.

ஆனால் நண்பர்களுடன் பார்ட்டி பண்ணும் பொழுது சொந்த கதை, சோக கதையெல்லாம் புலம்புவார்கள் என்று மட்டும் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி சொல்லும் கஷ்டத்தையும் காமெடி பண்ணி சிரித்து விட்டு போயிக்கிட்டேயிருப்பாங்க. அதுவே ஆண்களின் உளவியல்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்