
ஐ.பி.எல். தொடருடன் நேரடியாக மோதும் பாகிஸ்தான் சூப்பர் லீக் !
உலகப் புகழ்பெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்குப் போட்டியாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 11-வது சீசனை ஐ.பி.எல். நடைபெறும் அதே காலப்பகுதியில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இதன்படி குறித்த தொடரானது எதிர்வரும் மார்ச் 26 முதல் மே 3 வரை நடைபெறவுள்ளது.
அத்துடன் IPL தொடர் மார்ச் 26 முதல் மே 31 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது.
பி.சி.சி.ஐ. உடன் மோதுவதைத் தவிர்க்காமல், ஐ.பி.எல். தொடர் ஆரம்பமாகும் அதே மார்ச் 26-ஆம் திகதியன்றே பி.எஸ்.எல். தொடரையும் ஆரம்பிக்க பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது.
ஐ.பி.எல். தொடர் நடைபெறும் அதே சமயத்தில் பி.எஸ்.எல். நடத்தப்படுவது இது தொடர்ச்சியான இரண்டாவது ஆண்டாகும்.
உலக அளவில் ஐ.பி.எல். தொடர் வருமானம், நட்சத்திர வீரர்கள் மற்றும் ரசிகர் பட்டாளத்தில் உச்சத்தில் உள்ள நிலையில், பி.எஸ்.எல். தொடர் அதனுடன் போட்டி போடுவது சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
