ஐ. நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான வரைவு தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான A/HRC/57/L.1 தீர்மான வரைவு வாக்கெடுப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் குறித்த தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.