ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றும் ஜனாதிபதி

நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79ஆவது கூட்டத்தொடரில் எதிர்வரும் புதன்கிழமை (24) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார்.

ஐ.நா. வெளியிட்ட திருத்தப்பட்ட தற்காலிக பேச்சாளர்களின் பட்டியலில் குறித்த தினத்தில் ஜனாதிபதி பிற்பகல் அமர்வில் உரையாற்றவுள்ளார்.

இம்மாதம் 23 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதிவரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

அரச தலைவராக தனது முதல் ஐ.நா. பொதுச் சபை உரையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இலங்கையின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரல், பொருளாதார மறுமலர்ச்சி முயற்சிகள் மற்றும் காலநிலை நடவடிக்கை, நிலையான வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.