ஐஸ், போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

ஐஸ், போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

கொழும்பில் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீதொட்டமுல்ல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வியாழக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வெல்லம்பிட்டி பிரதேசத்தி வசிக்கும் 40 வயதுடையவர் ஆவர்.

சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 800 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் 200போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News