ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

பதுளை வினிதகம பகுதியில் ஐஸ் ரக போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை பொலிஸ்துறையின் போதைபொருள் ஒழிப்பு பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைய கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 11 கிராம் 670 மில்லிகிராம் ஐஸ் ரக போதை பொருள் கைப்பற்றப்பட்டதுடன் இன்றைய தினம் வியாழக்கிழமை பசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.